UPDATED : மே 31, 2021 12:00 AM
ADDED : மே 31, 2021 09:06 PM
சென்னை:
அண்ணா பல்கலையின் மறுதேர்வு மற்றும் வினாத்தாள் மாற்றத்திற்கு, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதே முறை, அடுத்த தேர்விலும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, பல்கலை யின் தேர்வு கட்டுப்பாட்டு துறை வழியே, ஒருங்கிணைந்த செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச்சில் நடத்திய செமஸ்டர் தேர்வில், ௭௦ சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. அதனால் தேர்வு முறையை மாற்றுவ தாகவும், ஏற்கனவே நடந்த தேர்வுக்கு பதிலாக, மறுதேர்வு நடத்தப்படும் என்றும், தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது.
மறுதேர்வுகள், ஜூன் 14ல் துவங்க உள்ளன. இந்நிலையில், அண்ணா பல்கலையின் சிண்டிகேட் கூடி, தமிழக அரசின் முடிவுக்கு, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து அனைத்து கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாணவர்கள் வீட்டில் இருந்து, &'ஆன்லைன்&' வழியில் மறுதேர்வு எழுதலாம். கொரோனா பிரச்னைக்கு முன், அண்ணா பல்கலை பின்பற்றிய மூன்று மணி நேர தேர்வுக்கான வினாத்தாள் முறை, இந்த தேர்விலும் பின்பற்றப்படும். அடுத்த ஏப்ரல், மே மாத தேர்வும், இதே முறையில் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
