இரண்டாம் திருப்புதல் தேர்வு ஜூன் 2ம் தேதி துவக்கம்
இரண்டாம் திருப்புதல் தேர்வு ஜூன் 2ம் தேதி துவக்கம்
UPDATED : மே 31, 2021 12:00 AM
ADDED : மே 31, 2021 09:21 PM
உடுமலை:
உடுமலை கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, &'வாட்ஸ்ஆப்&' வாயிலாக இரண்டாம் திருப்புதல் தேர்வு, வரும், 2ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, &'ஆன்லைன்&' வழி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், கடந்த வாரம், &'வாட்ஸ்ஆப்&' வாயிலாக, முதல் திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வில், குறைக்கப்பட்ட பாடப்பகுதியின் முதல் பாதியில் இருந்து வினாக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஜூன், 2 முதல், 9ம் தேதி வரை, இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, வரும், 2ல், தமிழ்; 3ல், ஆங்கிலம்; 4ல், கணிதம், தாவரவியல், பொருளாதாரம்; 5ல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல்; 7ல், இயற்பியல், வணிகவியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வு நடைபெறும்.
வரும் 8ல், உயிரியல், விலங்கியல், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியியல், வரலாறு, டெக்டைல்ஸ் டெக்னாலஜி மற்றும் தமிழ்; 9ல், வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுகள் நடத்தப்படும். குறிப்பாக, மதியம், 3:00 முதல், 4:30 மணி வரை மட்டுமே தேர்வு நடக்கிறது. வினாக்கள், குறைக்கப்பட்ட பாடப்பகுதியின் இரண்டாம் பாதியில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
