தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறன்களை வளர்க்க இதுதான் நல்ல நேரம்!

திறன்களை வளர்க்க இதுதான் நல்ல நேரம்!

திறன்களை வளர்க்க இதுதான் நல்ல நேரம்!


UPDATED : மே 31, 2021 12:00 AM

ADDED : மே 31, 2021 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2021 12:00 AM ADDED : மே 31, 2021 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் தொடர்ந்து தள்ளிவைப்பு, ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பின்மை, செய்முறை வகுப்புகள் இல்லாமை, வேலைவாய்ப்பு கேள்விக்குறி, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை போன்றவற்றால், இளைஞர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக கூறும் மனநல மருத்துவர்கள், அவர்களுக்கு பெற்றோர் தைரியமூட்ட வேண்டும், தற்போது கிடைத்துள்ள நேரத்தை பயனுள்ள வகையில் உபயோகிக்க, வழிநடத்த வேண்டும் என்கின்றனர். 

இது தொடர்பாக இளைஞர்கள் சிலரிடம் பேசினோம்...

பூஜாஸ்ரீ, குனியமுத்துார்
எப்போது கொரோனா முற்றிலும் ஒழியும், கல்லுாரி திறப்பார்கள் என்ற மனநிலைக்கு வந்து விட்டோம். ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் எளிமையாக இருந்தாலும் அதில் ஓர் ஈடுபாடு இருப்பதில்லை. இதே நிலை தொடர்ந்தால், எவ்வாறு சமாளிப்பது என தெரியவில்லை. வேலைவாய்ப்பு பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், செய்முறை களப்பணிகள் என பலவற்றை மேற்கொள்ள முடியாமல், வேலைவாய்ப்பை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என தோன்றுகிறது.
ராமசவ்ஜன்யா, கோவைப்புதுார்
ஆன்லைன் வகுப்பில், நாள் முழுவதும் அமர்வது மனஅழுத்தம் தருகிறது. தலைவலி, கண் எரிச்சல், துாக்கமின்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறோம். நேர்காணல் வருமா, வேலை கிடைக்குமா என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கொரோனா காரணமாக வேலையில் இருப்பவர்களே வெளியில் அனுப்பப்படும் நிலையில், புதிதாக கல்லுாரி முடித்து வரும் எங்களை போன்றவர்களுக்கு, உடனடியாக கிடைக்குமா என்ற பயம் ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது?
சுரேஷ், குனியமுத்துார்
மொபைல் போனை வெறுக்கும் அளவுக்கு, ஆன்லைன் வகுப்புகள் மீது, ஓர் வெறுப்பு ஏற்பட்டு விட்டது. எத்தனை நேரம், எவ்வித மனித தொடர்பும் இல்லாமல், நான்கு சுவற்றுக்கு நடுவில் மொபைலை பார்த்துக்கொண்டு இருக்க முடியும். இது ஓர் மந்தமான நிலையை ஏற்படுத்துகிறது. எப்போது இந்நிலை மாறும் என காத்துக்கொண்டு இருக்கிறோம்.
சுபஸ்ரீ, பள்ளி மாணவி, பீளமேடு
ஆரம்பத்தில் விடுமுறை ஜாலியாகத்தான் இருந்தது. தற்போது, எப்போதுதான் பள்ளி திறக்குமோ என்று தோன்றுகிறது. எங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எல்லாம் நடப்பதில்லை; வாட்ஸ்ஆப் மூலம் என்ன படிக்க வேண்டும் என தகவல் வரும். நாங்களாக படிக்க சிரமமாக உள்ளது. வீட்டிற்குள்ளும் பல கட்டுப்பாடுகள், வெளியில் நண்பர்களுடன் விளையாடவும் தடை. இதை எதிர்கொள்ள கடும் சிரமமாக உள்ளது; என்ன செய்வதென்று புரியவில்லை.
விஷ்ணுபிரியா, பீளமேடு
அரசு கலை கல்லுாரியில், முதுகலை இரண்டாமாண்டு படிக்கிறேன். தேர்வுகளை மூன்று முறை தள்ளிவைத்து விட்டனர். ஆன்லைன் கல்வி முறை வெறுப்பை ஏற்படுத்துகிறது. பகுதிநேரமாக வேலைக்கு சென்று கொண்டு இருந்தேன்; இப்போது அதற்கும் வாய்ப்பில்லை. இறுதியாண்டு என்பதால், அடுத்தகட்டமாக வேலைவாய்ப்பு கிடைக்குமா என்ற பயம் எழுந்துள்ளது. கல்லுாரியில் இருந்து இருந்தால் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிகள், மாதிரி நேர்காணல் போன்றவற்றை எதிர்கொண்டு இருப்போம்.

உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறியதாவது:


மொழிகள் கற்கலாம்!

* மாணவர்களுக்கு திறன்களை வளர்த்துக்கொள்ள, சரியான நேரம் இது என்று தான் கூற வேண்டும்.* வீட்டில் இருக்கும் சமயங்களில் கூடுதலாக பிற மொழிகள் கற்கலாம். ஆங்கில தொடர்பு திறன் அதிகரித்தல் உள்ளிட்ட திறன்களை, யூடியூப் உதவியுடன் மேம்படுத்திக் கொள்ளலாம். இதனால் வேலை கிடைப்பது எளிதாகும்.* வேலைவாய்ப்ப குறித்து சிந்திக்க வேண்டிய சமயம் இதுவல்ல; நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்புடன், ஆரோக்கியத்துடன் இருப்பதுதான், தற்போதைக்கு மிகவும் முக்கியமானது.

தைரியமூட்டுங்க பெற்றோரே!

* மாணவர்களை காட்டிலும் பெற்றோரே, பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து, அதிக மனஅழுத்தத்தில் உள்ளனர். விரைவில் எல்லாம் சரியாகிவிடும்.* மாணவிகள் சிலர் உடல் பருமன், மாதவிடாய் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதை காண முடிகிறது. உணவு உண்ணும் நேரம், இரவு உறக்கத்திற்கான நேரங்களில் மாறியிருப்பதே காரணம்.* பிள்ளைகளை காலையில் சரியான நேரத்தில் எழச்செய்ய வேண்டும். சரியான நேரத்தில் உணவு வழங்கி, உடற்பயிற்சி அல்லது வீட்டுவேலையில் ஈடுபடுத்த வேண்டும். இரவில் நல்ல உறக்கம் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தைரியம் அளிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us