தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை வாய்ப்பு பதிவு சலுகை அறிவிப்பு

வேலை வாய்ப்பு பதிவு சலுகை அறிவிப்பு

வேலை வாய்ப்பு பதிவு சலுகை அறிவிப்பு


UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM

ADDED : ஜூன் 03, 2021 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM ADDED : ஜூன் 03, 2021 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:
வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 2017 - 2019ம் ஆண்டுகளில், பதிவு மற்றும் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:


மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணத்தால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கியுள்ளது. இச்சலுகையை வரும், ஆகஸ்ட், 27ம் தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள், மேற்கண்ட தேதிக்குள், திருவள்ளுர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு, பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும், புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us