UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM
ADDED : ஜூன் 03, 2021 06:14 PM
கோவை:
எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடக்கின்றன.
கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் செய்யப்படுகிறது. இடைநிற்றல் தடுக்கும் வகையில், பின்பற்றப்படும் இந்த உத்தரவை, கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்காத சூழலில் நடைமுறைப்படுத்துமாறு, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்பது முதல் பிளஸ் 1 வரையும், ஆல்பாஸ் பொருந்தும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மாவட்ட வாரியாக, எட்டாம் வகுப்பு வரை, தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்மாணவர்கள், வரும் கல்வியாண்டில் அடுத்த வகுப்பிற்கு செல்லும் வகையில், தகவல்களை புதுப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை ஆசிரியர்கள், வீட்டிலிருந்தபடியே மேற்கொள்வதாக, தலைமையாசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.
