UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM
ADDED : ஜூன் 03, 2021 06:19 PM
அ நிறம் | அளவு
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2017 முதல் 2019 வரை, வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு, மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, பதிவை புதுப்பிக்க தவறியோர், வரும் 28 முதல் ஆக., 27ம் தேதிக்குள், http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில், பதிவு அட்டையை புதுப்பித்து கொள்ளலாம்.
அவ்வாறு புதுப்பிக்க முடியாதோர், அலுவலக முகவரிக்கு, பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து, புதுப்பித்து கொள்ளலாம். அதேபோல், கிண்டியில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களும், புதுப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
