தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லூரிக்கு ரூ.1.50 கோடியில் புதிய உயரழுத்த மின்பாதை: அமைச்சர்

மருத்துவ கல்லூரிக்கு ரூ.1.50 கோடியில் புதிய உயரழுத்த மின்பாதை: அமைச்சர்

மருத்துவ கல்லூரிக்கு ரூ.1.50 கோடியில் புதிய உயரழுத்த மின்பாதை: அமைச்சர்


UPDATED : ஜூன் 05, 2021 12:00 AM

ADDED : ஜூன் 05, 2021 01:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2021 12:00 AM ADDED : ஜூன் 05, 2021 01:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
&'&'கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, 1.50 கோடி ரூபாயில், புதிய உயரழுத்த மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது,&'&' என, அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர், எஸ்.வெள்ளாளப்பட்டி துணை மின் நிலையத்தில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கும் பணி நடந்தது. மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். 

அப்போது, அவர் கூறியதாவது: 

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, எஸ்.வெள்ளாளப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு, 3.2 கி.மீ., தூரத்திற்கு புதிய உயரழுத்த மின்பாதை, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாலம்மாள்புரம் துணை மின் நிலையத்தில் இருந்துதான் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் மின் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. 
இதே மின் பாதையில் தொழிற்சாலைகளுக்கும், வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. தற்போது பிரத்யேகமாக, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கென தனியான மின் பாதை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார் 
எம்.பி.,ஜோதிமணி, கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மருத்துவக்கல்லூரி டீன் முத்துச்செல்வன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us