நீட் தேர்வின் தாக்கம்; ஓய்வு நீதிபதி தலைமையில் குழு
நீட் தேர்வின் தாக்கம்; ஓய்வு நீதிபதி தலைமையில் குழு
UPDATED : ஜூன் 06, 2021 12:00 AM
ADDED : ஜூன் 06, 2021 08:38 AM
நடவடிக்கை
அவரது அறிவிப்பு:
மத்திய அரசின் நீட் தேர்வு முறையால், நம் மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், தமிழ் வழியில் படிப்போர் என, பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு சில ஆண்டுகளாக, மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் நிலை உள்ளதாக, கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதைக் கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என, கருணாநிதி ஆட்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது.அதன்படி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ கல்லுாரி இடங்கள் நிரப்ப வலியுறுத்தி, பல சட்டப் போராட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
நீதியை நிலைநாட்டும் வரலாற்று கடமை, தமிழகத்திற்கு எப்போதும் உண்டு. இந்தக் கடமையை தொடர்ந்து நிறைவேற்ற, நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை அகற்ற, தேவையான நடவடிக்கைகளை எடுக்க, அரசு உறுதி பூண்டுள்ளது.
உயர்நிலை குழு
நீட் தேர்வு முறை, சமுதாயத்தின் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு, சில ஆண்டுகளாக, பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என, ஆராய வேண்டும். பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுக்க வேண்டும்.
அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அவற்றுக்கான சட்ட வழிமுறைகள் குறித்தும் முழுமையாக ஆராய வேண்டும். இதுகுறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரை அளித்திட, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலை குழு அமைக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
