நீட் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களுக்கு தடுப்பூசி
நீட் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களுக்கு தடுப்பூசி
UPDATED : ஜூன் 08, 2021 12:00 AM
ADDED : ஜூன் 08, 2021 12:16 PM
அ நிறம் | அளவு
கோவை:
நீட் தேர்வு நடத்தப்படும் பட்சத்தில், தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு, முன்னதாகவே சம்மந்தப்பட்ட பள்ளிகளில், தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, இந்துமக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில்குமார் கூறியுள்ளதாவது:
எந்த சூழலிலும் தமிழக மாணவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடாது. ஒரு வேளை மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் பட்சத்தில், விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும், சம்மந்தப்பட்ட பள்ளிகளில், கொரோனா தடுப்பூசிகளை முன்னதாகவே செலுத்த வேண்டும்.
இதன் வாயிலாக, தேர்வின் போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதோடு, மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
