பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம் இணைய வழியில் கருத்தரங்கு
பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம் இணைய வழியில் கருத்தரங்கு
UPDATED : ஜூன் 10, 2021 12:00 AM
ADDED : ஜூன் 10, 2021 04:01 PM
கருமத்தம்பட்டி:
கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த இணைய வழி கருத்தரங்கு நடந்தது. இதில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வி பாடப்பிரிவுகள், அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகள், அவற்றில் உள்ள பாடப்பிரிவுகள், அவற்றில் சேர, தயாராக வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள், இணைய தள முகவரிகள் குறித்து தலைமையாசிரியர் இளமுருகன் விளக்கினார். எந்தப் பிரிவில் ஆர்வம் அதிகம், எப்படிச் சேருவது என, பெற்றோருடன் ஆலோசித்து படிப்பை தேர்வு செய்ய வேண்டும், என்று உதவித்தலைமையாசிரியர் முத்தரசி கூறினார்.
கோவை அரசு கலைக்கல்லுாரி பேராசிரியை மாலதி, கல்லுாரி பாடப்பிரிவுகள், சேர்க்கை முறைகள், மாணவிகளுக்கான கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் முரளி மற்றும் தொண்டர்கள், உருவாக்கிய &'வாகை அகாடமி&' இணைய தளத்தில், மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சேவை துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் பங்கேற்றனர்.
