பி.யு.சி., முதல் ஆண்டுக்கு தேர்வு உண்டு; மாணவர்கள் கலக்கம்
பி.யு.சி., முதல் ஆண்டுக்கு தேர்வு உண்டு; மாணவர்கள் கலக்கம்
UPDATED : ஜூன் 12, 2021 12:00 AM
ADDED : ஜூன் 12, 2021 11:00 AM
பெங்களூரு:
முதலாம் ஆண்டு பி.யு.சி., மாணவர்களுக்கு, இம்முறை தேர்வு இருக்காது என அறிவித்த கர்நாடக அரசு, தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடத்த முற்பட்டிருப்பது, மாணவர்கள், பேராசிரியர்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது.
கொரோனாவால், மாணவர்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, முதலாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு நடத்தப்படாது என, அரசு அறிவித்திருந்தது. எனவே மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதை நிறுத்தி விட்டனர். ஆனால் தற்போது பி.யு., கல்வித்துறை, முதலாம் ஆண்டு தேர்வு நடத்த தயாராகிறது. இரண்டு விதமான வினாத்தாள்களை தயாரித்து, இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வினாத்தாள்களை மாணவர்கள், &'டவுன்லோட்&' செய்து, பதில் எழுதி வாட்ஸ் ஆப், இ - மெயில், தபால் மூலம் பேராசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.இதை பேராசிரியர்கள் திருத்தி, &'ஸ்டூடன்ட் அச்சீவ்மென்ட் டிராக்கிங் சிஸ்ட&'த்தில், பதிவிறக்கம் செய்ய வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, மாணவர்கள், பேராசிரியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதலில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, தற்போது திடீரென தேர்வு நடத்த முற்பட்டால், மாணவர்கள் எப்படி தேர்வு எழுதுவது என, கேள்வி எழுந்துள்ளது.
