தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆர்.ஜி.யு.எச்.எஸ்., பல்கலை துணைவேந்தர் சர்ச்சை

ஆர்.ஜி.யு.எச்.எஸ்., பல்கலை துணைவேந்தர் சர்ச்சை

ஆர்.ஜி.யு.எச்.எஸ்., பல்கலை துணைவேந்தர் சர்ச்சை


UPDATED : ஜூன் 14, 2021 12:00 AM

ADDED : ஜூன் 14, 2021 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2021 12:00 AM ADDED : ஜூன் 14, 2021 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான, தனியார் பல் மருத்துவ கல்லுாரி முதல்வரை, ஆர்.ஜி.யு.எச்.எஸ்., பல்கலைக்கழகத்துக்கு, தற்காலிக துணை வேந்தராக நியமித்திருப்பது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஜி.யு.எச்.எஸ்., எனும் ராஜிவ்காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தர் சச்சிதானந்தா பதவி காலம், இன்றுடன் முடிவடைகிறது.
 இப்பல்கலைக் கழகத்துக்கு, நிரந்தர துணை வேந்தர் நியமிக்கும் வரை, மாருதி பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் ஜெயகர் ஷெட்டியை, தற்காலிக துணை வேந்தராக, கவர்னர் வஜுபாய் வாலா நியமித்துள்ளதாக, கடந்த, 11ல் அரசு உத்தரவிட்டது. ஜெயகர் ஷெட்டி நியமனத்திற்கு, மருத்துவ கல்வித்துறையில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆர்.ஜி.யு.எச்.எஸ்., வரலாற்றில், தனியார் கல்லுாரி முதல்வரை, துணை வேந்தர் பதவிக்கு நியமித்தது இல்லை.
அரசு புதிய சம்பிரதாயத்தை துவங்கியதாக, பல்கலைக்கழக வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. ஜெயகர் ஷெட்டி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர், 2013ல், டி.சி.ஐ., எனும், டென்டல் கவுன்சில் ஆப் இந்தியாவில் உறுப்பினராக இருந்த போது, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது. 
இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடந்தது.சி.பி.ஐ., அதிகாரிகள், ஜெயகர் ஷெட்டியை அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். இத்தகைய நபரை, பல்கலைக்கழகத்தின் தற்காலிக துணைவேந்தர் பதவியில் அமர்த்துவது சரியல்ல என, பலரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
ஜெயகர் ஷெட்டி கூறியதாவது:

நான் டி.சி.ஐ., உறுப்பினராக இருந்த போது, தனியார் கல்லுாரிகளுக்கு, சட்ட விரோதமாக சீட்களை அதிகரிக்க வாய்ப்பளித்ததாக கூறுவது, பொய்யான குற்றச்சாட்டு. வேறு இரு உறுப்பினர்களுக்கு எதிரான, ஊழல் வழக்கில் எனக்கு தொடர்பிருக்குமோ என, சந்தேகித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர். என் மீது எந்த புகார், வழக்கும் பதிவாகவில்லை. ஆர்.ஜி.யு.எச்.எஸ்., சட்டத்தில், தனியார் கல்லுாரி முதல்வரை, துணை வேந்தர் பதவிக்கு நியமிக்கக்கூடாது என, கூறப்படவில்லை. எனக்கெதிராக சதி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us