தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்துங்க: பள்ளிகளுக்கு அறிவுரை

ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்துங்க: பள்ளிகளுக்கு அறிவுரை

ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்துங்க: பள்ளிகளுக்கு அறிவுரை


UPDATED : ஜூன் 15, 2021 12:00 AM

ADDED : ஜூன் 15, 2021 08:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2021 12:00 AM ADDED : ஜூன் 15, 2021 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'&'பள்ளிகளில், &'ஆன்லைன்&' வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும்; நேரடி வகுப்புகளை நடத்தக்கூடாது,&'&' என, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். 
தமிழக பள்ளிகளில், புதிய மாணவர் சேர்க்கை மற்றும் நிர்வாக பணிகள் நேற்று துவங்கின. சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியர் சேர்க்கையை, அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால், அந்த மாணவர்களுக்கு, &'ஆல் பாஸ்&' என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கலாம் என, முதல் கட்டமாக ஆலோசித்துள்ளோம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
ஊரடங்கு தளர்வுகள் உள்ள, 27 மாவட்டங்களில், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது; மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அமலானதும், மாணவர் சேர்க்கை துவங்கும். தற்போது, பிளஸ் 1 சேரும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒரு வாரத்தில், பள்ளிகளிலேயே புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும்.தற்போதைய நிலையில், நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து,
இன்னும் ஆலோசிக்கவில்லை. கல்வி, &'டிவி&' - ஆன்லைன் மற்றும் &'வாட்ஸ் ஆப்&' வழியில் பாடங்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் வழியில் பாடங்களை பள்ளிகள் துவக்கலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க மாட்டோம்; அதை சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பள்ளிக் கல்வித் துறையில், ஆய்வகங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில், ஊழல் நடந்துள்ளதா என்பது பற்றி விசாரிக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். 
தனியார் பள்ளிகளில், 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என, நீதிமன்றம் கூறியுள்ளது. அதை பள்ளிகள் பின்பற்ற வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சீர் செய்ய, முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு மகேஷ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us