மாநில தகுதித் தேர்வுக்கு மொபைல் போன் மூலமாக விண்ணப்பிக்கலாம்
மாநில தகுதித் தேர்வுக்கு மொபைல் போன் மூலமாக விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூன் 16, 2021 12:00 AM
ADDED : ஜூன் 16, 2021 03:45 PM
பெங்களூரு:
நடப்பாண்டு கர்நாடக மாநில தகுதித் தேர்வுக்கு &'மொபைல் போன்&' மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மொபைல் போன் மூலமாக, தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் &'ப்ளே ஸ்டோரில்&' தகுதி தேர்வுக்கான செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இது தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.
கல்வித்துறையின் சார்பில் தகுதி தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கு தயாராவதற்கு இலவச பயிற்சி வகுப்பு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. &'ஞான விக்னன தரங்கா&' என்ற பெயரில் பயற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு இதுவரை, 60 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
http://forms.gle/ydFjC1vAbGpq1F7i8 என்ற இணைப்பில் நுழைந்து பயிற்சிக்கு பதிவு செய்யலாம்.வகுப்புகள் நாள்தோறும் மாலை 5:00 முதல் 8:00 மணி வரை நடக்கும். பல்வேறு பாடங்களில் சிறந்த வல்லுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இவ்வாறு கூறினர்.
