தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியை அறநிலைய துறை ஏற்பதா?

பள்ளியை அறநிலைய துறை ஏற்பதா?

பள்ளியை அறநிலைய துறை ஏற்பதா?


UPDATED : ஜூன் 17, 2021 12:00 AM

ADDED : ஜூன் 17, 2021 01:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2021 12:00 AM ADDED : ஜூன் 17, 2021 01:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியை அறநிலையத் துறை ஏற்று நடத்துவதற்கு, ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம், சென்னை கீழப்பாக்கத்தில் உள்ளது. இந்நிலம், 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த நிலையில், குத்தகை காலம் முடிந்தபின் நீதிமன்ற உத்தரவுப்படி இடமும், அங்குள்ள சீதா கிங்ஸ்டன் பள்ளி கட்டடத்தையும் அறநிலையத் துறை கையகப்படுத்தியது. &'இப்பள்ளியை அறநிலையத் துறையே நடத்தும்&' என, அமைச்சர் சேகர்பாபு கூறியதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. 
&'ஏற்கனவே கோவில் நிர்வாகங்களுக்கு கீழ் இயங்கும் பள்ளிகளின் தரம் உயராமல் அப்படியே இருக்கும்போது இது தேவை இல்லாதது. அறநிலையத்துறை, கோவில் பணிகளில் முதலில் கவனம் செலுத்தட்டும்&' என ஹிந்து அமைப்புகள், கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திசை திருப்பும் முயற்சி

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன்:

அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோவில்கள் பல இன்னும் சீரமைக்கப்படாத சூழலில், பள்ளி நிர்வாகத்தை எப்படி நடத்த போகின்றனர். பள்ளியை தனியாரிடம் கொடுத்து வாடகையை வசூலித்தால் அறநிலையத்துறைக்கு வருவாய் கிடைக்கும்.பள்ளியை நடத்த வேண்டியது அறநிலையத் துறையின் வேலை அல்ல. கும்பாபிஷேகம், திருப்பணிகள் செய்வதுதான் அதன் முக்கிய பணி. அறநிலையத்துறையின் பணிகள் என்னென்ன என்பது குறித்து நீதிமன்றமே வரையறுத்துள்ளது.
வாடகை தராத இடங்களில் முதலில் வசூலிக்கட்டும். பல ஆண்டுகளாக குறைந்த வாடகைக்கு இருப்பவர்களே, முறையாக வாடகை செலுத்துவதில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்கள் சிலவற்றை, நிதி பற்றாக்குறையால் அவர்களால் உடனடியாக செய்ய முடியவில்லை. அதை திசை திருப்பவே இதுபோன்ற அறிவிப்புகளை தி.மு.க.,வினர் வெளியிட்டு வருகின்றனர்.
இதுவா வேலை? 

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்:

விளம்பரத்திற்காக அறநிலையத்துறை இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தவர்கள், தொடர்ந்து அப்பள்ளியை நடத்த முடியவில்லை அந்த சுமையை அறநிலையத்துறை தலையில் இறக்கி வைத்து விட்டனர். 
அறநிலையத்துறைக்கு இதுவா வேலை?

பள்ளி நிர்வாகத்தை நடத்த இப்போது என்ன அவசியம் வந்தது. ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க, முதலில் நடவடிக்கை எடுக்கட்டும். காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் இடத்தை குத்தகை முடிந்து மீட்டது போல், சிவன் கோவில் இடத்தை, 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள லயோலா கல்லுாரியிடம் இருந்தும் மீட்க வேண்டும். அதை மீட்க, அறநிலையத் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.

ஊழலுக்கு வழிவகுக்கும்


ஆலய பாதுகாப்பு இயக்க மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல்: 

பள்ளி நடத்துவது போன்ற சமூகம் சார்ந்த வேலையை செய்வது அரசின் பணி. அறநிலையத்துறை பணி அல்ல. இத்துறை பள்ளி, கல்லுாரிகள் வெற்றிகரமாக செயல்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இச்சூழலில் சீதா கிங்ஸ்டன் பள்ளியை ஏற்று நடத்துவது, ஊழலுக்கு வழிவகுக்கும். அந்த பள்ளியை பள்ளிக்கல்வித்துறை வசம் ஒப்படைத்து, அருகில் உள்ள அரசு பள்ளி நிர்வாகத்தோடு இணைத்து விடலாம். 
அறநிலையத்துறை, கோவில் தொடர்பான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். சொத்துக்கள், காணாமல் போன நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் தேர்கள், குளங்கள், நந்தவனம் சிதலமடைந்துள்ளன. அதை புனரமைக்க வேண்டும். நிர்வாக சீர்கேடுகளை களைய கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்.
கவனிக்கட்டும் 


சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்பாளர் ஆதிசேஷன்: 

கோவில்களை நிர்வகிப்பது மட்டும்தான் அறநிலையத் துறையின் வேலை. கோவில்களை பாதுகாப்பது, சொத்துக்களை பராமரிப்பதுதான் அத்துறைக்கு முக்கியமானது. இச்சூழலில் பள்ளி நிர்வாகத்தில் கவனம் செலுத்துவது என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாக பணிகளில் கவனம் செலுத்தாமல் உள்ள நிலையில், பள்ளி நிர்வாகத்தில் எப்படி கவனம் செலுத்துவர்.
பள்ளிக்கு தேவையான வசதிகளை கோவில் வருவாயில் இருந்து தான் எடுத்து செலவழிக்க வேண்டியிருக்கும். கோவில் இடத்தில் ஷாப்பிங் மால் இருந்தால், அதை அறநிலையத்துறை ஏற்று நடத்துமா. இப்படி ஒவ்வொரு இடத்தில் உள்ளதை அறநிலையத்துறையே ஏற்று நடத்தினால், அத்துறை உருவாக்கப்பட்டதற்கான அறம் கேள்விக்குறியாகி விடும். எனவே பள்ளி நிர்வாகத்தை, தனியாரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைத்து விடலாம். 
47 ஆயிரம் ஏக்கர் எங்கே?


ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: 

அறநிலையத்துறையில் விளம்பரத்திற்காக தி.மு.க.,வினர் சில திட்டங்களை அறிவித்து வருகின்றனர். கோவில் ஆக்கிரமிப்புகளை அவர்கள் முறையாக மீட்டெடுக்கவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், சென்னை வேங்கீஸ்வரர் கோவில், அகத்தியர் கோவில் ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அகற்றவில்லை.
கோவில் சொத்துக்களை ஆவணப்படுத்தி வருவதை வரவேற்கிறோம். அதேசமயம், 47 ஆயிரம் ஏக்கர் மாயமாகி உள்ளது. அது எங்கே போனது. இதுவும் ஒரு ஊழல்தானே. மீட்க அறநிலையத் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us