தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செமஸ்டெர் தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை

செமஸ்டெர் தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை

செமஸ்டெர் தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை


UPDATED : ஜூன் 17, 2021 12:00 AM

ADDED : ஜூன் 17, 2021 01:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2021 12:00 AM ADDED : ஜூன் 17, 2021 01:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
&'&'செமஸ்டர் தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்க பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்&'&' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன், உயர்கல்வித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான அஸ்வத் நாராயணா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் அவர் கூறியதாவது:

கொரோனா இரண்டாவது அலையால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை நிர்வாகத்தினர் உறுதிபடுத்த வேண்டும். 
மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் வரும் கல்வியாண்டில் எந்த பாதிப்பும் இல்லாமல் கல்லுாரியை நடத்த இயலும். பி.யு.சி., இரண்டாமாண்டு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கான வாய்ப்புள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நான்காண்டு இளநிலை பட்டபடிப்பை செயல்படுத்தலாம். அடுத்த இரண்டு கல்வியாண்டுக்கான அட்டவனை தயாராக உள்ளது. முதலாண்டு மாணவர் சேர்க்கையை அக்., முதல் வாரத்தில் துவக்குவதற்கான பணிகளை துணைவேந்தர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us