தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர்களை காப்பாற்ற அடுத்தடுத்த கமிட்டிகள் அமைப்பு

பேராசிரியர்களை காப்பாற்ற அடுத்தடுத்த கமிட்டிகள் அமைப்பு

பேராசிரியர்களை காப்பாற்ற அடுத்தடுத்த கமிட்டிகள் அமைப்பு


UPDATED : ஜூன் 17, 2021 12:00 AM

ADDED : ஜூன் 17, 2021 01:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2021 12:00 AM ADDED : ஜூன் 17, 2021 01:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் தகுதி சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஆர்வம் காட்டும் துணைவேந்தர் கிருஷ்ணனின் தன்னிச்சை முடிவால் பேராசிரியர்கள் அதிருப்தியடைந்துஉள்ளனர்.
செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது 36 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் பலருக்கு தகுதி இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு எதிரொலியால் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர்அலி தலைமையிலான கமிட்டி விசாரித்து 2019, நவ.,5ல் அறிக்கை தாக்கல் செய்தது. இதன்பேரில் நடவடிக்கை எடுக்க துணைவேந்தருக்கு சிண்டிகேட் அதிகாரம் வழங்கியும் ஒன்றரையாண்டுகளாக எதுவும் நடக்கவில்லை.
அதேநேரம் துணைவேந்தர் பரிந்துரையால், தகுதி சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர்கள் தங்கராஜ், நாகரத்தினம் ஆகியோருக்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக தொடர்ந்த வழக்கில், பேராசிரியர்கள் தங்கராஜ், நாகரத்தினம் மற்றும் சுதா சிண்டிகேட் உறுப்பினராக செயல்பட தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே பதவி உயர்வு சர்ச்சையில் சிக்கிய கர்ணமகாராஜன் உள்ளிட்ட 11 பேராசிரியர்கள் தகுதிகள் குறித்து ஆய்வு செய்ய பிற பல்கலைகளின் பேராசிரியர் கொண்ட கமிட்டிகளை துணைவேந்தர் அடுத்தடுத்து அமைத்து அறிக்கை பெற்று வருகிறார்.
நீதிபதி அக்பர் அலி கமிட்டி பரிந்துரையை புறக்கணித்துவிட்டு, சம்மந்தப்பட்ட சர்ச்சை பேராசிரியர்களுக்கு &'பாசிட்டிவ்&' அறிக்கை கிடைக்கும் வரை உள்நோக்கத்துடன் துணைவேந்தர் கமிட்டிகளை அமைத்து வருகிறாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இது, நீதிமன்றத்தில் வழக்காக உள்ளதால் மேலும் குழப்பங்கள் ஏற்பட வழிவகுக்கும். புதிய பதவி உயர்வு நடவடிக்கைகளை கைவிட்டு வெளிப்படை தன்மையுடன் துணைவேந்தர் செயல்பட வேண்டும் என பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us