தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு மதிப்பெண் ஓ.பி.எஸ்., வலியுறுத்தல்

10ம் வகுப்பு மதிப்பெண் ஓ.பி.எஸ்., வலியுறுத்தல்

10ம் வகுப்பு மதிப்பெண் ஓ.பி.எஸ்., வலியுறுத்தல்


UPDATED : ஜூன் 19, 2021 12:00 AM

ADDED : ஜூன் 19, 2021 01:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2021 12:00 AM ADDED : ஜூன் 19, 2021 01:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'பத்தாம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும்&' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:

தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, &'தேர்ச்சி&' என்று மட்டுமே சான்றிதழில் குறிப்பிடப்படும் என அறிவித்திருப்பது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அதிர்ச்சியை அளித்து உள்ளது. பத்தாம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் இருப்பது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதில்சிக்கலை ஏற்படுத்துமோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, முதல்வர் தலையிட்டு, பத்தாம் வகுப்பு சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மற்றொரு அறிக்கையில், &'புதுக்கோட்டை மாவட்டம் வடத்தெரு பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை, மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும். &'கடலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில் புதிதாக 15 கிணறுகளை அமைக்க, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையத்திற்கு அனுமதிதரக்கூடாது&' என, அவர் வலியுறுத்தி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us