தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவ தேர்வு: ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

முதுநிலை மருத்துவ தேர்வு: ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

முதுநிலை மருத்துவ தேர்வு: ரத்து செய்ய கோர்ட் மறுப்பு


UPDATED : ஜூன் 19, 2021 12:00 AM

ADDED : ஜூன் 19, 2021 01:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2021 12:00 AM ADDED : ஜூன் 19, 2021 01:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
கொரோனாவை காரணம் காட்டி முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கொரோனா தொடர்பான பணிகளில் டாக்டர்கள் முழுமையாக ஈடுபட்டு உள்ளனர். கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகமாக உள்ளது.முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வை, இப்போது நடத்துவது சரியாக இருக்காது. தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

கொரோனா நிலையை கண்காணித்து முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வை நடத்துவதற்கான தேதிகளை முடிவு செய்யும் படி பல்கலைகளை தேசிய மருத்துவ கவுன்சில் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. 
தேர்வுக்கு தயாராக, மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கி, தேர்வு தேதிகளை அறிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு நாட்கள் கால அவகாசம் வழங்குவது என்பது பற்றி, நாங்கள் முடிவு செய்ய முடியாது. பல்கலைகள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் கொரோனா நிலைமை ஒரே மாதிரியாக இருக்காது.
டில்லியில் ஏப்ரல், மே மாதங்களில் தொற்று நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது வைரஸ் பரவல் பெரிதும் குறைந்து உள்ளது. கர்நாடகாவில் இப்போதும் நிலைமை மோசமாக உள்ளது. பல்கலைகளை கேட்காமல் நாடு முழுதும் ஒரே மாதிரியான உத்தரவை பிறப்பிக்க முடியாது. அதனால் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வை ஒத்தி வைக்கவோ, ரத்து செய்யவோ உத்தரவிட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us