தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாடு சென்னை பல்கலையில் உயர் குழு

தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாடு சென்னை பல்கலையில் உயர் குழு

தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாடு சென்னை பல்கலையில் உயர் குழு


UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM

ADDED : ஜூன் 21, 2021 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM ADDED : ஜூன் 21, 2021 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'இணையவழி கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேம்படுத்த, உயர்நிலை குழு அமைக்கப்படும்&' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
சென்னை பல்கலையின், சிண்டிகேட் உறுப்பினர்களின் கூட்டம், துணை வேந்தர் கவுரி தலைமையில், நடந்தது. 
இதுகுறித்து, பல்கலை துணை வேந்தர் கவுரி கூறியதாவது:

சென்னை பல்கலை மற்றும் கல்லுாரிகளின் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், உயர்நிலை மேம்பாட்டு குழு அமைக்கப்படும்.
இதில், சர்வதேச அளவில் பிரபலமான மற்றும் நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர்கள், பல்கலைகளின் முன்னாள், இந்நாள் துணை வேந்தர்களின் கருத்துகள் பெறப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.திருக்குறளின் கருத்துகளை மாணவர்கள், தங்கள் கல்வியில் எடுத்து கொண்டு, அதன்படி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், &'திருக்குறள் சார்ந்த தொழில்நெறி&' என்ற, விருப்பப் பாடம் கொண்டு வரப்படும்.
இளங்கலையில், முதலாம் ஆண்டில், இரண்டாம் செமஸ்டர் மாணவர்களுக்கு, மூன்று மதிப்பெண், &'கிரெடிட்&' வழங்கும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இந்த பாடம் இடம் பெறும்.தற்போதைய, &'ஆன்லைன்&' கல்வியை பரவலாக பயன்படுத்துவது, ஆன்லைன் கல்வி மற்றும் தேர்வின் தரத்தை உயர்த்துவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தகவல் அறிவியல், கணினி வழி பயன்பாடு கற்றல் போன்றவற்றை மேம்படுத்த, உயர்நிலை ஆலோசனை குழு அமைக்கப்படும்.
ஆராய்ச்சி படிப்புகளில், இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. வரும் காலங்களில் ஆராய்ச்சி மாணவர்களும், பேராசிரியர்களும் தங்கள் ஆராய்ச்சி கட்டுரையின் சுருக்க உரையை, ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழிலும் வழங்க வேண்டும்.இதனால், தமிழ் வழியில் படித்த மாணவர்களும், பிற துறையை சேர்ந்தவர்களும், ஆராய்ச்சி கட்டுரைகளின் அம்சங்களை படித்து தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us