தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டுகோள்

சர்வதேச வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டுகோள்

சர்வதேச வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டுகோள்


UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM

ADDED : ஜூன் 21, 2021 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM ADDED : ஜூன் 21, 2021 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
சர்வதேச, தேசிய போட்டிக்கு தயாராகும் விளையாட்டு வீரர்களுக்கு, நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டுமென, பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக, விளையாட்டு போட்டிகள் நடத்தவும், பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த20 நாட்களுக்கு மேலாக பல்வேறு விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல், வீட்டிலே முடங்கியுள்ளனர். கோவையில் மட்டும், 20க்கும் மேற்பட்ட சர்வதேச,தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த தடகள வீரர்கள் இருப்பதால், வீரர்களின் எதிர்கால விளையாட்டை கருத்தில் கொண்டு பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என, பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, பயிற்சியாளர்கள் கூறுகையில், &'பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி, பயிற்சி அளிக்க அனுமதி வழங்கினால், உடல் திறனையும் விளையாட்டு நுணுக்கங்களையும் மேம்படுத்த முடியும். எதிர் வரும் போட்டிகளில் வெற்றி பெற எளிதாக இருக்கும்&' என்றனர். ஆன்லைனில் செஸ் சாருவின் முதலிடம்செஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் கோவை, குளோபல் அவுட்லியர் அகாடமியின் சார்பில், ஆன்லைன் வாயிலாக, செஸ் போட்டி நடத்தப்பட்டது. ஏழு சுற்றுகளாக நடந்த போட்டியில், 42 வீரர்கள் பங்கேற்றனர். 
போட்டியின் முடிவில், சாருவின், சஜிஷ்ணு வியாசன், மித்ரா ரமேஷ் ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று முதல், மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, இ- சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. என்.ஜி.பி., கல்லுாரியில்விளையாட்டு வீரர் தேர்வுகோவை, காளப்பட்டி ரோடு என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியின் விளையாட்டு துறை சார்பில், ஆண்டு தோறும் சாதனை படைத்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிதேர்வு நடத்தப்படும்.
கொரோனா காரணமாக இம்முறை, ஆன்லைன் வாயிலாக மாணவர்களின் சான்றிதழ் மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் வீராங்கனை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.இம்முறை மாணவ, மாணவிகளுக்கான தடகளம்; மாணவர்களுக்கான வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி, கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடக்க உள்ளது.கோ-கோ, த்ரோபால், புதுவகை விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை சமர்ப்பிக்க, https://bit.ly/3zlrFf4 என்ற முகவரில் முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்கள் அறிய, 94445 66273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us