தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு ஆசிரியர்கள் தடுப்பூசி: தனியார் பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு

அரசு ஆசிரியர்கள் தடுப்பூசி: தனியார் பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு

அரசு ஆசிரியர்கள் தடுப்பூசி: தனியார் பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு


UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM

ADDED : ஜூன் 24, 2021 08:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM ADDED : ஜூன் 24, 2021 08:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறையில், அரசு பள்ளி ஆசிரியர்கள், 658 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், சுகாதாரத்துறை வாயிலாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
தெற்கு ஒன்றியத்தில் ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடக்கு ஒன்றியத்தில் புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடந்தது. ஆசிரியர்கள் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில், தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. 
தெற்கு ஒன்றியத்தில், 150 ஆசிரியர்கள்; வடக்கு, 143; ஆனைமலை, 140 என மொத்தம், 433 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.தெற்கு ஒன்றிய ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு முகாமில், ஆசிரியர்களை வரிசையில் அனுப்பாததால் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின், அதிகாரிகள் சமரசம் செய்து, சமூக இடைவெளி பின்பற்ற அறிவுறுத்தினர். பொள்ளாச்சி பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடவில்லை.
கோரிக்கை


பல இடங்களுக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இது போன்று சிறப்பு முகாம் நடத்தி, தடுப்பூசி போட வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us