தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மோடிக்கு பேனர் வைக்க பல்கலைகளுக்கு உத்தரவு?

மோடிக்கு பேனர் வைக்க பல்கலைகளுக்கு உத்தரவு?

மோடிக்கு பேனர் வைக்க பல்கலைகளுக்கு உத்தரவு?


UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM

ADDED : ஜூன் 24, 2021 08:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM ADDED : ஜூன் 24, 2021 08:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை இலவசமாக வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கல்லுாரி, பல்கலைகளில், &'பேனர்&' எனப்படும் விளம்பர பலகைகள் வைக்க, பல்கலை மானியக் குழு உத்தரவிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் புதிய முறை, நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் செயலர் ராஜேஷ் ஜெயின், பல பல்கலை நிர்வாகிகளுக்கு, &'வாட்ஸ் ஆப்&' செயலியில் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.
&'நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது. மாணவர் உட்பட பலரும் தெரிந்து கொள்ளும் வகையில், இது குறித்த விளம்பரப் பலகைகளை பல்கலைகளில் வைக்க வேண்டும்&' என, அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தி, ஒலிபரப்பு துறை உருவாக்கியுள்ள மாதிரியையும் அவர் இணைந்திருந்தார். அதில் பிரதமர் மோடியின் படத்துடன், பிரதமருக்கு நன்றி என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பல்கலை மானியக் குழுவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us