மாநில கல்வி கொள்கை உருவாக்க கமிட்டி அமைக்க வி.சி., வலியுறுத்தல்
மாநில கல்வி கொள்கை உருவாக்க கமிட்டி அமைக்க வி.சி., வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM
ADDED : ஜூன் 24, 2021 08:21 AM
அ நிறம் | அளவு
சென்னை:
&'&'மாநில கல்வி கொள்கையை உருவாக்க, கமிட்டி அமைக்க வேண்டும்,&'&' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டசபை தலைவர் சிந்தனைசெல்வன் வலியுறுத்தினார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
நுாறு நாட்களுக்குள், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் நடவடிக்கைக்கு பாராட்டுகள். பெரிய கோவில்கள் மட்டுமின்றி, சிறிய கோவில்களிலும் ஜாதிய பாகுபாடு இல்லாமல் செய்ய வேண்டும். பவுத்தம் மற்றும் சமணம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரத்தில் மணிமேகலைக்கு, சிலை அமைக்க வேண்டும். பட்டியலினத்தவர்களுக்கு தேசிய ஆணையம் உருவாக்க வேண்டும். எதிர்காலத்திற்கு வெளிச்சம் தரும் உரையாக, கவர்னர் உரை உள்ளது. இவ்வாறு சிந்தனைசெல்வன் பேசினார்.
