தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி கல்வி கமிஷனருக்கு அதிகாரம் அரசாணை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பள்ளி கல்வி கமிஷனருக்கு அதிகாரம் அரசாணை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பள்ளி கல்வி கமிஷனருக்கு அதிகாரம் அரசாணை எதிர்த்த வழக்கு தள்ளுபடி


UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM

ADDED : ஜூன் 24, 2021 08:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM ADDED : ஜூன் 24, 2021 08:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளி கல்வி துறை இயக்குனரின் அதிகாரங்களை, கமிஷனருக்கு வழங்கி உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரியலுாரைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியர் கருணாகரன் தாக்கல் செய்த மனு: நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளி கல்வி துறை இணை இயக்குனராக, பின் இயக்குனராக நியமிக்கப்பட்டனர். கடந்த, 2019 நவம்பரில், பள்ளி கல்வி கமிஷனர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்தனர்.
பள்ளி கல்வி துறை செயலர் என்ற பதவி இருக்கும் நிலையில், அனுபவம் இல்லாத கமிஷனர் பதவி தேவையற்றது. பள்ளி கல்வி துறை இயக்குனரின் அதிகாரங்களை, கமிஷனருக்கு வழங்கி, மே 14ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை ரத்து செய்ய வேண்டும். கமிஷனருக்கு பதில், கல்வி துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குனராக நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, &'&'ஏற்கனவே இதே பதவியில், மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருந்துள்ளனர். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,&'&' என்றார்.
இதையடுத்து முதல் பெஞ்ச், &'குறிப்பிட்ட பதவிக்கு ஒருவரை நியமிப்பது என்பது, அரசின் நிர்வாக வரம்புக்கு உட்பட்டது; நியமனத்தில் சட்டவிரோதம் இருந்தால் மட்டுமே, நீதிமன்றம் குறுக்கிட முடியும். &'ஏற்கனவே இந்த பதவியை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வகித்துள்ளதாக, அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். வழக்கில் தகுதி இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது&' என உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us