தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய திறனறி தேர்வு 172 மாணவர்கள் தேர்ச்சி

தேசிய திறனறி தேர்வு 172 மாணவர்கள் தேர்ச்சி

தேசிய திறனறி தேர்வு 172 மாணவர்கள் தேர்ச்சி


UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM

ADDED : ஜூன் 24, 2021 08:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM ADDED : ஜூன் 24, 2021 08:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில் 172 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

விழுப்புரம் சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா செய்திக்குறிப்பு: 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை தேர்வு (திறனறி தேர்வு) நடத்தப்படுகிறது. கடந்த பிப்ரவரி 21ம் தேதி நடந்த தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில் 41 மையங்களில் 4,106 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 172 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
இவர்களுக்கான கல்வி உதவித்தொகை விரைவில் வங்கிக் கணக்கு விபரங்களை மாணவர்களிடமிருந்து பெற்று பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்பப்பட உள்ளது. எனவே, மாணவர்கள் விரைவில் வங்கி கணக்கு துவங்கி அதன் விபரங்களை தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us