உளவியல் பாதிப்பிற்குள்ளான குழந்தைகளுக்காக தனி நிறுவனம்
உளவியல் பாதிப்பிற்குள்ளான குழந்தைகளுக்காக தனி நிறுவனம்
UPDATED : நவ 14, 2009 12:00 AM
ADDED : நவ 14, 2009 05:07 PM
திண்டுக்கல்: உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ள குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஒரு கோடி ரூபாய் செலவில் தனி நிறுவனம் அமைக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல், கவன குறைபாடு, பள்ளி செல்லாமை, பழகுவதில் குறைபாடு, எழுத்து குறைபாடு உட்பட பல்வேறு உளவியல் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை செய்ய திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பெங்களூரு தேசிய மனநல நரம்பியல் விஞ்ஞான ஆய்வு மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது உளவியல் குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இந்த பணியில் குறைபாடு கண்டறிதல், சிகிச்சை அளித்தல், பயிற்சி அளித்தல் முக்கியமானது. இதனால் டாக்டர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம். இவர்களை ஒருங்கிணைத்து இத்திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்த தனி நிறுவனம் தேவை. இதற்கு ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படுகிறது. அரசின் உதவி ஏதுமில்லாமல், தனியார் அமைப்புகள் மூலம் இந்த நிதியை திரட்டி திட்டத்தை செயல்படுத்தவும், இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவை அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தவும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
