ஸ்டிரைக் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை பட்டியல் அனுப்ப இயக்குனரகம் உத்தரவு
ஸ்டிரைக் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை பட்டியல் அனுப்ப இயக்குனரகம் உத்தரவு
UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM
ADDED : ஜூன் 26, 2021 07:01 PM
சென்னை:
&'ஜாக்டோ - ஜியோ&' வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை குறித்த பட்டியலை தாக்கல் செய்யுமாறு, சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 2019 ஜன., 22 முதல் 30 வரை காலவரையற்ற &'ஸ்டிரைக்&' நடத்தப்பட்டது. அதனால், பள்ளிகள் இயங்காமல் பாதிக்கப்பட்டன.
போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது, பள்ளி கல்வித் துறை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அதனால், ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன் பெறுதல், பதவி உயர்வு உட்பட ஆசிரியர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.எனவே, ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய, ஜாக்டோ - ஜியோ கோரிக்கை விடுத்து வந்தது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கை யில் கூறப்பட்டது.
இந்நிலையில், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் முதற்கட்டமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்களை, பட்டியல் தயாரித்து இயக்குனரகத்துக்கு அனுப்புமாறு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையா, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
