தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.பி.வி.எம்.சி.,க்கு புதிய பேராசிரியர்கள் நியமனம்; மருத்துவர்கள் எதிர்ப்பு

ஏ.பி.வி.எம்.சி.,க்கு புதிய பேராசிரியர்கள் நியமனம்; மருத்துவர்கள் எதிர்ப்பு

ஏ.பி.வி.எம்.சி.,க்கு புதிய பேராசிரியர்கள் நியமனம்; மருத்துவர்கள் எதிர்ப்பு


UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM

ADDED : ஜூன் 26, 2021 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM ADDED : ஜூன் 26, 2021 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரில் ஏ.பி.வி.எம்.சி.,க்கு புதிய பேராசிரியர்கள் நியமிக்க பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் ஏ.பி.வி.எம்.சி., எனப்படும் அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக, 33 பேராசிரியர்கள் நியமிக்க, ஜூன் 11 ல் அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:

பெங்களூரு மருத்துவ கல்லுாரியிலிருந்து, ஏ.பி.வி.எம்.சி., கல்லுாரிக்கு மாறுதல் பெற்றுக்கொள்ளவும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு பலரும் விண்ணப்பித்துள்ளனர்.ஆனால், பல ஆண்டுகளாக பணிசெய்தும், எந்த பதவி உயர்வும் இல்லாமல் மாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், நாங்களும் ஒரே நிலையில் பணியாற்ற வேண்டும் என்பது சாத்தியமில்லை. பெங்களூரு மருத்துவ கல்லுாரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதால், அவர்கள் புதிதாக சேரும் பேராசிரியர்களை வழிநடத்த முடியும். இதன் மூலம், சிகிச்சை தொடர்பான பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடியும். 
புதிதாக நியமிக்கப்படுபவர்கள் நான்காண்டுகளில் பதவி உயர்வும் பெற முடியும். ஆனால் பத்து ஆண்டுகளாக எந்த பதவி உயர்வும் இல்லாமல் மாற்றம் செய்யப்படுவதில் நியாயமில்லை.
தற்போது பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் பவுரிங் மருத்துவமனை மருத்துவர்கள், ஏ.பி.வி.எம்.சி., கல்லுாரியில் பேராசிரியர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் புதிய பேராசிரியர்கள் தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏ.பி.வி.எம்.சி., கல்லுாரி டீன் மனோஜ் குமார் கூறியதாவது:

கல்லுாரியில் ஏற்கனவே இரண்டு பிரிவு வகுப்புகள் உள்ளன. இதனால் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. புதிய பேராசிரியர்களை நியமிப்பதால், பெங்களூரு மருத்துவ கல்லுாரி பேராசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படபோவதில்லை. இதில் எந்த பாராபட்சமும் கிடையாது.
கல்லுாரியில் 188 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 33 இடங்களுக்கு மட்டுமே தற்போது நியமிக்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இணை பேராசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு புதிதாகவே அறிவிப்பு வெளியிடப்படும். இதை தொடர்பு படுத்தி புதிய பேராசிரியர்கள் நியமனத்தை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us