தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/25 சதவீத இலவச கட்டாயக் கல்விதிட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

25 சதவீத இலவச கட்டாயக் கல்விதிட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

25 சதவீத இலவச கட்டாயக் கல்விதிட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM

ADDED : ஜூன் 26, 2021 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM ADDED : ஜூன் 26, 2021 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
மாவட்டத்தில் 62 மெட்ரிக் பள்ளியில் 1043, 90 நர்சரி தொடக்க பள்ளிகளில் 841, 2 சுயநிதிபள்ளிகளில் 16 என மொத்தம் 1900 இடங்களுக்கு இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி., முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 3 ல் இட ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விபரம் கல்விதுறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 9 ல் தகுதி வாய்ந்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.ஆகஸ்ட் 10 ல் இடஒதுக்கீட்டிற்கு மேல் கூடுதலாக விண்ணப்பங்கள் இருந்தால் குலுக்கல் நடைபெறும்.
முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த வட்டார வளமைய அலுவலகம் ஆகிய இடங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us