மாணவர்களை ஊக்குவிக்கும் கற்றல் திறன் குறைந்திருந்தால், தனி கவனம்
மாணவர்களை ஊக்குவிக்கும் கற்றல் திறன் குறைந்திருந்தால், தனி கவனம்
UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM
ADDED : ஜூன் 26, 2021 07:13 PM
திருப்பூர்:
பெரிச்சிபாளையம் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2020-21ம் ஆண்டுக்கான வகுப்புகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, பள்ளி முதல்வர் அரவிந்த், கூறியதாவது:
ஊரடங்கிலும், தாளாளர் இளங்குமரன் வழிகாட்டுதலில், 50 ஆசிரியர்கள் &'ஆன்லைன்&' மூலமாக வகுப்பு எடுக்கின்றனர். கற்றல் திறனை சோதிக்க மாதந்தோறும் தேர்வு நடத்தி இணையம் மூலமாகவே கண்காணிக்கிறோம். பாடங்கள் புரியாத, கற்றல் திறன் குறைந்தவர்களுக்கு மீண்டும் தனியாக பயிற்சி வழங்குகிறோம். சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் பிரத்யேக பயிற்சி அளித்து மருத்துவ படிப்புகளுக்கு தயார் படுத்துகிறோம்.
பாடம் சார்ந்து மட்டுமல்லாது பல்வேறு படைப்புதிறன்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கிறோம். குறிப்பாக, செய்தித்தாளில் அறிவியல் சார்ந்த கட்டுரைகளை சேகரிப்பது, கிராப்ட் பொருள் தயாரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.
குறைந்த கட்டணத்தில், நிறைவான கல்வியை மாணவர்களுக்கு வழங்குகிறோம்.இங்கு, 80 சதவீதம் படிக்கும் மாணவர்கள், பனியன் தொழிலாளர்களின் குழந்தைகள். எனவே, எந்த வகையிலும், குறைந்த கற்றல் திறனை அடிப்படையாக கொண்டு மாணவர்களை இடையில் நிறுத்தாமல், தொடர்ந்து ஊக்குவிக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
