தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1 பெயில் ஆன 30 ஆயிரம் பேர் அரியர் தேர்வின்றி பிளஸ் 2 பாஸ்

பிளஸ் 1 பெயில் ஆன 30 ஆயிரம் பேர் அரியர் தேர்வின்றி பிளஸ் 2 பாஸ்

பிளஸ் 1 பெயில் ஆன 30 ஆயிரம் பேர் அரியர் தேர்வின்றி பிளஸ் 2 பாஸ்


UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM

ADDED : ஜூன் 28, 2021 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM ADDED : ஜூன் 28, 2021 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பிளஸ் 1 மாணவர்கள், 30 ஆயிரம் பேர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, பிளஸ் 2வில், &'ஆல் பாஸ்&' ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த கல்வியாண்டில் ரத்து செய்யப்பட்டதால், அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு அறிவித்துஉள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. பிளஸ் 1ஐ பொறுத்தவரை, கடந்த ஆண்டு, ஒரு பாடத்துக்கு தேர்வு நடத்தவில்லை. ஆனால், அந்த மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் காலாண்டு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
அதேநேரம், இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்துள்ள 8.5 லட்சம் பேரில், 30 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 1ல் சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு பிளஸ் 2வில், &'ஆல் பாஸ்&' வழங்கினாலும், பிளஸ் 1ல், &'அரியர்&' தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, அவர்களின் நிலை குறித்து, மதிப்பெண் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அரசு வெளியிட்டுள்ள மதிப்பெண் வழிகாட்டு முறையில், தற்போது பிளஸ் 2 முடித்துள்ளவர்களில் யாராவது, பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலோ அல்லது பங்கேற்காவிட்டாலோ, அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக, 35 மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், 30 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 1ல், &'பெயில்&' ஆனாலும், அரியர் பாடங்களில், 35 மதிப்பெண் பெறுவர். அவர்கள் பிளஸ் 2விலும் தேர்ச்சி சான்றிதழ் பெற்று, உயர் கல்விக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us