தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவரே... நீங்கள்தான் எதிர்கால விஞ்ஞானிகள்!

மாணவரே... நீங்கள்தான் எதிர்கால விஞ்ஞானிகள்!

மாணவரே... நீங்கள்தான் எதிர்கால விஞ்ஞானிகள்!


UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM

ADDED : ஜூன் 28, 2021 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM ADDED : ஜூன் 28, 2021 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊரடங்கிலும் குழந்தைகளின் அறிவியல் சார்ந்த செயல்முறைகளுக்கு தீனி போட அரிய வாய்ப்பு.இந்தியாவில், விஞ்ஞான அறிவை மேம்படுத்தவும், பரப்புவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை பள்ளி மாணவர்களுக்கு தருவதற்காக, இந்திய அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, &'டி.ஒய்.ஏ.யூ.,&' என்ற தன்னார்வ அறிவியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.
கலிலியோ அறிவியல் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:

புகழ்பெற்ற விஞ்ஞானிகள் அல்லது அறிவியல் தொடர்பாளர்களுடன் நேரடியாக கலந்துரையாட ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளது.வழக்கமான தேசிய அளவிலான வினாடி-வினாக்களில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள், ஆண்டுதோறும் நடக்கும் தொலை நோக்கி தயாரிக்கும் பயிற்சி பட்டறைக்கு தேர்வு செய்யப்படுவர். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பதிவு செய்யலாம். மாணவர்கள் கற்கவும் தங்கள் தொலைநோக்கியை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 
இது மாணவர்களின் அன்றாட அறிவியல் அறிவை மேம்படுத்தும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஆர்வமும் ஆராய்ச்சி துறையில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படுமாறு பல்வேறு விஞ்ஞானிகளின் படைப்புகள் கொண்ட மாதாந்திர செய்திமடல், ஒவ்வொரு மாணவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 
ஒவ்வொரு மாதத்தின் ஒவ்வொரு, 3வது ஞாயிறு அன்று, நேரடி கலந்துரையாடல் இணையவழியாக காலை 11:00 மணிக்கு நடைபெறும். மாணவர்கள் மத்தியில் அறிவியல் சிந்தனையை வளர்ப்பது, ஆராய்ச்சி துறையில் ஈடுபாட்டை வளர்ப்பது, மேலும் அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவையே இதன் நோக்கம்.
விருப்பமுள்ளவர்கள் www.dyau.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கடைசி தேதி ஜூலை 18. கூடுதல் தகவல்களுக்கு, 87782 01926 எண்ணை அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us