தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரெடி டு லேர்ன் இங்கிலீஷ்! ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் ஆர்வம்

ரெடி டு லேர்ன் இங்கிலீஷ்! ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் ஆர்வம்

ரெடி டு லேர்ன் இங்கிலீஷ்! ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் ஆர்வம்


UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM

ADDED : ஜூன் 29, 2021 01:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM ADDED : ஜூன் 29, 2021 01:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்:
அன்னுார் ஒன்றியத்தில் நேற்று மாணவர் சேர்க்கை துவங்கியது. ஆங்கில வழியில் கற்க அதிக பேர் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். 
ஒவ்வொரு கல்வி ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை துவங்கும். கொரோனா காரணமாக, தாமதமாக நேற்று, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை துவங்கியது. அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. குன்னத்துார்புதுார் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை, வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ் துவக்கி வைத்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நோட்டுகள் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
அன்னுார் ஒன்றியத்தில் முதல் நாளான நேற்று, முதல் வகுப்பில் 205 பேரும், 2 முதல் 8 வரை உள்ள வகுப்புகளில், 85 பேரும் என, 290 பேர் நேற்று புதிதாக பள்ளியில் சேர்ந்தனர். பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் கற்பிக்கும்படி ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டனர். அன்னுார் ஒன்றியத்திலுள்ள அன்னுார், சொக்கம்பாளையம், ஆனையூர், காட்டம்பட்டி, கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், நேற்று, 6 முதல் பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடந்தது. 
மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் நாளான நேற்று, 25 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். அவர்களுக்கு புத்தகங்களை தலைமையாசிரியர் செந்தில்குமார் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us