தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஜூன் 30, 2021 12:00 AM

ADDED : ஜூன் 30, 2021 09:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2021 12:00 AM ADDED : ஜூன் 30, 2021 09:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
வயது முதிர்ந்தோர் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-2021ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதிகள் 01.01.2021ம் நாளன்று 58 வயது முடிந்திருக்க வேண்டும்.ஆண்டு வருவாய் ரூ. 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று தமிழ்ப் பணிபுரிந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணியாற்றும் தகுதிச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாத உதவித்தொகையாக ரூ. 3500 ; மருத்துவப்படி ரூ. 500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். 
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறை எண்.233 முதல் தளம், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற விலாசத்தில் 31.08.2021-க்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us