தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் டெல்டா பிளஸ் கண்டறியும் ஆய்வகம்!

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் டெல்டா பிளஸ் கண்டறியும் ஆய்வகம்!

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் டெல்டா பிளஸ் கண்டறியும் ஆய்வகம்!


UPDATED : ஜூன் 30, 2021 12:00 AM

ADDED : ஜூன் 30, 2021 09:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2021 12:00 AM ADDED : ஜூன் 30, 2021 09:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'&'தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், &'டெல்டா பிளஸ்&' கொரோனா வைரசை கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்கப்படுகிறது,&'&' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், டெல்டா பிளஸ் கண்டறியும் ஆய்வகம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், துறை செயலர் ராதாகிருஷ்ணன், பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:


எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், ஜிகா, சிக்குன் குனியா, எச்.ஐ.வி., - எய்ட்ஸ், டெங்கு உள்ளிட்ட வைரஸ்களை ஆய்வு செய்ய, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் உள்ளது. கொரோனா பரிசோதனை ஆய்வகமும் சிறப்பாக செயல்படுகிறது. இங்கு தான், டெல்டா பிளஸ் கொரோனா வைரசை கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகம் அமைந்து விட்டதால், டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்கான மாதிரிகளை, பெங்களூருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது.
&'நீட்&' தேர்வு பாதிப்புகளை ஆராய, தமிழக அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவிடம், இதுவரை, 86 ஆயிரத்து, 342 பேர் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த குழுவை எதிர்த்து, பா.ஜ.,வின் கரு.நாகராஜன், அரசியல் நோக்கோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீட் தேர்வு பாதிப்பால், இதுவரை, 13 மாணவர்கள் இறந்துள்ளனர். கிராமப்புற, ஏழை மாணவர்களை பாதிக்கும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஒரு தீர்வு வேண்டுமென, தேர்தலின் போது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
கடந்த, 2006ல், முதல்வராக இருந்த கருணாநிதி, அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து, சட்ட நடவடிக்கைகள் வாயிலாக, நுழைவு தேர்வு இல்லாத நிலையை உருவாக்கினார். அந்த வகையில், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளார்.
சட்டசபையில், பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன், நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு, அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார். ஆனால், அக் கட்சியை சேர்ந்த ஒருவரே, குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது, அக்கட்சியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.பா.ஜ.,வும், அதன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வும், நீட் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில், புதிதாக அமைக்கப்பட்டு வரும், 11 மருத்துவ கல்லுாரிகளில், விரைவில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கிண்டி கிங் ஆய்வகத்தில், புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us