தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு ரூ.1,000 டிபாசிட்: சேர்க்கையை அதிகரிக்க திட்டம்

மாணவர்களுக்கு ரூ.1,000 டிபாசிட்: சேர்க்கையை அதிகரிக்க திட்டம்

மாணவர்களுக்கு ரூ.1,000 டிபாசிட்: சேர்க்கையை அதிகரிக்க திட்டம்


UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM

ADDED : ஜூலை 02, 2021 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM ADDED : ஜூலை 02, 2021 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்:
பட்டுக்கோட்டை அருகே, அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெயர்களில் 1,000 ரூபாய் &'டிபாசிட்&'டும், குலுக்கலில் பெற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம்பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 2021 -2022ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை துவங்கிய நிலையில், முன்னாள் மாணவர்கள் 10 பேர், தலைமை ஆசிரியர் சரவணனுடன் இணைந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டனர்.
இதன்படி, புதிதாக அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெயரில், அஞ்சலகத்தில் 1,000 ரூபாய் டிபாசிட், பெற்றோரை ஊக்கப்படுத்தும் விதமாக, குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்குவதாக அறிவித்தனர். இதன்படி சேர்க்கை துவங்கிய சில தினங்களில் 14 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அவர்கள் பெயர்களில், அஞ்சலகத்தில் துவங்கிய கணக்கு புத்தகத்தை, நேற்று பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பாக்கியம் செல்வம், தலைமை ஆசிரியர் சரவணன் மற்றும் கிராம மக்கள் வழங்கினர். 
சரவணன் கூறியதாவது:

இந்த திட்டத்துக்காக, பள்ளியின் முன்னாள் மாணவர் கோவிந்தராசு 25 ஆயிரம் ரூபாயும், நான் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளேன். அத்துடன் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோரை, குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதலிடம் பெறும் நபருக்கு 10 ஆயிரம், இரண்டாம் இடம் பெறும் நபருக்கு 5,000, மூன்றாமிடம் பெறும் நபருக்கு 2,500 ரூபாய் ஊக்கதொகை வழங்கப்பட உள்ளது.
தொலை துாரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ஆகியவை வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us