தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜெர்மனியில் படிக்க, பணிபுரிய வாய்ப்பு

ஜெர்மனியில் படிக்க, பணிபுரிய வாய்ப்பு

ஜெர்மனியில் படிக்க, பணிபுரிய வாய்ப்பு


UPDATED : ஜூலை 05, 2021 12:00 AM

ADDED : ஜூலை 05, 2021 09:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2021 12:00 AM ADDED : ஜூலை 05, 2021 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெர்மனியில் உயர்கல்வி பயிலவும், பணிபுரியவும் உள்ள வாய்ப்புகள் குறித்து இந்திய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், லண்டன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் டெவெலப்மெண்ட் (எல்.ஐ.எஸ்.டி.,) வெபினாரை நடத்துகிறது.
ஜூலை 9ம் தேதி இந்திய நேரப்படி, பிற்பகல் 2:30 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சியில் படிப்புகள், கல்விக்கட்டண விலக்கு, உதவித்தொகை, ஜெர்மனியில் உள்ள மிகப்பெரும் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறுதற்கான வழிமுறைகள், தகுதிகள் உட்பட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட உள்ளன.  குறிப்பாக, பி.ஏ., பி.எஸ்சி., பி.இன்ஜி., போன்ற இளநிலை பட்டப்படிப்புகள், எம்.பி.ஏ., ஆன்லைன் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளன. 
மேலும், படிப்பிற்கு பிறகான 1.5 ஆண்டு விசா, ஜெர்மனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, 27 ஐரோப்பிய நாடுகளில் அத்தகைய விசா செல்லுபடியாகும். 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மன் பாஸ்போர்ட், புளு கார்டு, துணைவியரும் முழுநேரமாக பணி புரிவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இந்நிகழ்ச்சியில் இலவசமாக பங்கேற்க:
https://zoom.us/j/9698324486?pwd=bGU4V1BYODhJS1IwSWhJdXFlUW5wUT09
விபரங்களுக்கு:

எல்.ஐ.எஸ்.டி., கிழக்கு ஆசிய மண்டல ஆலோசனை நிறுவனம்
வாட்ஸ் ஆப்:
+60162090584
இமெயில்:
ceohgedu@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us