தமிழகத்தில் 14 இடங்களில் ஐ.டி., பார்க்: முதல்வர் தகவல்
தமிழகத்தில் 14 இடங்களில் ஐ.டி., பார்க்: முதல்வர் தகவல்
UPDATED : ஜூலை 06, 2021 12:00 AM
ADDED : ஜூலை 06, 2021 07:00 PM
சென்னை:
&'&'தமிழகத்தில், 14 இடங்களில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க வேண்டும்,&'&' என, அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தகவல் தொழில்நுட்பவியல் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அரசுத் துறையில் காகித பயன்பாட்டைக் குறைக்க, மின்னணு அலுவலக மென்பொருளை பயன்படுத்த வேண்டும். மாநிலத்தில், முதலீடுகளை பெருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில், 14 இடங்களில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க வேண்டும்.அரசுத் துறைகளில், கணினித் தமிழ் வளர்ச்சிக்கு, அதிவேக இணைய வசதிகளை ஏற்படுத்தும், &'பாரத்நெட்&' மற்றும், &'தமிழ்நெட்&' திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
அரசு கேபிள், &'டிவி&' நிறுவனத்தின் வாயிலாக, மக்களுக்கு குறைந்த விலையில், தரமான கேபிள் சேவைகள் அளிக்க வேண்டும். மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், 4 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளி வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை பெற்றிடும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகம், தமிழர் வரலாறை தெரிந்து கொள்ளும் நடவடிக்கைகளை, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வாயிலாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
சுயவேலை வாய்ப்புகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், &'&'படித்த இளைஞர்களை, தொழில் முனைவோர்களாக உருவாக்க, சுயவேலை வாய்ப்புத் திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வானுார்திகள், &'ரோபாடிக்ஸ்&' மற்றும் துல்லியமான கருவிகள் உற்பத்தி ஆகிய, உயர் தொழில்நுட்படத் துறைகளில் ஈடுபட ஏதுவாக, திட்டங்களை உருவாக்க வேண்டும்,&'&' என்றார்.
