தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.சி.சி., பேராசிரியர்களுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்

என்.சி.சி., பேராசிரியர்களுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்

என்.சி.சி., பேராசிரியர்களுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்


UPDATED : ஜூலை 07, 2021 12:00 AM

ADDED : ஜூலை 07, 2021 06:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2021 12:00 AM ADDED : ஜூலை 07, 2021 06:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின், இரு என்.சி.சி., பேராசிரியர்களுக்கு, தேசிய அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கல்லுாரியில், தேசிய மாணவர் படை தொழில்நுட்ப பிரிவு, விமானபடை, பீரங்கி படை ஆகிய, மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் சேர்ந்து, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், ராணுவ மற்றும் விமானப்படை பயிற்சிகள் பெறுகின்றனர். இதோடு, குடியரசு தின அணிவகுப்பு, தலைமை பண்பு பயிற்சி, துப்பாக்கி சுடுதல் முகாம் என, பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
என்.சி.சி., பேராசிரியர்களான ரவிக்குமார் மற்றும் ஜெய்னுலாப்தீன் ஆகியோர், நாக்பூரில் உள்ள இந்திய பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் இயங்கும், என்.சி.சி., அலுவலர் பயிற்சி கல்லுாரி மற்றும் தாம்பரம், விமானப்படை பயிற்சி கல்லுாரியில், நான்கு மாத கால சிறப்பு பயிற்சியில் பங்கேற்றனர். இறுதியில், பேராசிரியர் ரவிக்குமாருக்கு, லெப்டினன்ட் பதவியும், ஜெய்னுலாப்தீனுக்கு பிளையிங் ஆபிசர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us