இந்திய பல்கலை கூட்டமைப்பு தலைவராக திருவாசகம் தேர்வு
இந்திய பல்கலை கூட்டமைப்பு தலைவராக திருவாசகம் தேர்வு
UPDATED : ஜூலை 07, 2021 12:00 AM
ADDED : ஜூலை 07, 2021 07:01 PM
சென்னை:
&'&'தேசிய கல்வி கொள்கை - 2020 பற்றிய செயலாக்கத்தில், எதிர்கொள்ளவுள்ள சிரமங்கள் குறித்து, அனைத்து பல்கலைகளின் கருத்து அறியப்படும்,&'&' என, இந்திய பல்கலைகளின் கூட்டமைப்பு தலைவர், துணை வேந்தர் திருவாசகம் பேசினார்.
சென்னை &'அமெட்&' கடல்சார் பல்கலை துணை வேந்தர் திருவாசகம், இந்திய பல்கலைகளின் கூட்டமைப்பிற்கு, 100வது தலைவராக, 1,008 பல்கலைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லியில் பதவி ஏற்றார். துணை வேந்தர் திருவாசகத்திற்கு, அமெட் பல்கலை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இணை வேந்தர் ராஜேஷ் ராம்சந்திரன் பேசுகையில், &'&'நாட்டில் உள்ள 1,008 பல்கலை துணை வேந்தர்களில், மூத்த துணை வேந்தராக இருப்பதன் அடிப்படையில், திருவாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். &'&'அவர் சிறப்பாக பணியாற்றி, இந்திய உயர் கல்வியின் தரத்தை, உலகளவில் மேம்படுத்துவார்,&'&' என்றார்.
துணை வேந்தர் திருவாசகம் ஏற்புரையில், &'&'தேசிய கல்வி கொள்கை - 2020 பற்றிய செயலாக்கத்தில், எதிர்கொள்ளவுள்ள சிரமங்கள் தொடர்பாக, அனைத்து பல்கலைகளின் கருத்துகள் அறியப்படும்.&'&'அதற்கு தேவையான மாறுதல்களை, மத்திய கல்வி அமைச்சகம் செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்,&'&' என்றார்.
