தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை மறுநிர்ணயம் செய்ய வலியுறுத்தல்

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை மறுநிர்ணயம் செய்ய வலியுறுத்தல்

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை மறுநிர்ணயம் செய்ய வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM

ADDED : ஜூலை 09, 2021 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM ADDED : ஜூலை 09, 2021 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில் பயிலும் எஸ்.சி./எஸ்.டி., மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையை (போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்) மறுநிர்ணயம் செய்து அதிகரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.சி./எஸ்.டி., மாணவர்களின் உயர்கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக 2012 முதல் பொறியியல் கல்லுாரிகள் நிர்ணயித்த முழு கட்டணத்தையும் மாணவர்களுக்கு உதவி தொகையாக அரசு வழங்கியது. மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் பங்களிப்பு செய்தன.
இந்நிலையில் 2017ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் (அரசாணை 51 மற்றும் 52) மாற்றம்செய்து பொறியியல் கலந்தாய்வில் குறிப்பிடும் கட்டணம் மட்டும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதனால் எஸ்.சி., / எஸ்.டி., மாணவர் சேர்க்கை பெரும் அளவில் குறைந்தது.
இவர்களுடன் ஒப்பிடும்போது கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மிக குறைந்த தொகை தான் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு பி.ஏ.,வுக்கு ரூ.1600, பி.எஸ்சி.,க்கு ரூ.4200 என குறைந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் பலர் உயர்கல்வி வாய்ப்பை இழப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து தேனி அகம் அறக்கட்டளை பொறுப்பாளர் அய்யனார் கூறியதாவது:


அரசாணை 51 மற்றும் 52ஐ ரத்து செய்து புதிய கட்டண நிர்ணய குழு மூலம் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்துடன், விடுதி, உணவு, பராமரிப்பு உட்பட முழுவதும்உதவித் தொகையாக கல்லுாரிகள் மூலம் வழங்க வேண்டும்.
கலை, அறிவியல் படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். டிப்ளமோ நர்சிங், டி.பார்ம்., மற்றும் பி.எஸ்சி., சார்ந்த 30க்கும் மேற்பட்ட படிப்புக்களையும் &'போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்&' திட்டத்தின்கீழ் கொண்டுவரவேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us