தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடிசை மாணவர்களின் நம்பிக்கை சுடரான பட்டதாரி

குடிசை மாணவர்களின் நம்பிக்கை சுடரான பட்டதாரி

குடிசை மாணவர்களின் நம்பிக்கை சுடரான பட்டதாரி


UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM

ADDED : ஜூலை 09, 2021 08:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2021 12:00 AM ADDED : ஜூலை 09, 2021 08:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
சரவணம்பட்டி, கந்தசாமி நகர் குடிசைப்பகுதி மாணவர்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச டியூசன் எடுக்கிறார், பி.எட்., பட்டதாரியான மணிகண்டன். கொரோனா தொற்று காலத்திலும் இடைநிற்றல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட இவரது நடவடிக்கை, பலரையும் பாராட்ட வைத்துள்ளது.
சரவணம்பட்டி - கீரணத்தம் ரோட்டில் உள்ள, கரட்டுமேடு அடுத்த, கந்தசாமி நகர் குடிசைப்பகுதியில், 120 குடும்பங்கள் வசிக்கின்றன. வறுமை காரணமாக, கூலி வேலைக்கு இப்பகுதி பெற்றோர் செல்வது வழக்கம். இதனால், படிப்பின் மீது நாட்டமில்லாமல், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல சிறார்கள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தனர். 
இப்பகுதியில், பள்ளிப் படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு தான் இருந்தது. அரசு கல்லுாரியில், இளங்கலை தாவரவியல் படித்த இப்பகுதியை சேர்ந்த மணிகண்டன், தன்னை போல, மற்ற மாணவர்களும் கல்லுாரி வாசலை மிதிக்க வேண்டுமென எண்ணினார்.
இவரின் எண்ணத்திற்கு விதை போட்டது, விவேகானந்தா சேவா கேந்திரம். இந்த அமைப்பின் ஊக்கத்தால், கடந்த நான்கு ஆண்டுகளாக, சுற்றியுள்ள குழந்தைகளை திரட்டி, இலவசமாக டியூசன் எடுத்து வருகிறார் மணிகண்டன். தற்போது தனியார் கல்லுாரியில், பி.எட்., படிக்கும் இவர், கொரோனா தொற்று காலத்திலும், மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க, வீதியில் அமர வைத்தே, வகுப்பு எடுப்பது குறிப்பிடத்தக்கது.

பட்டதாரியான மணிகண்டன் கூறியதாவது:

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, 25 மாணவர்கள் படிக்கின்றனர். என் வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக, மரத்தடி நிழலில், வீதியில் கரும்பலகை வைத்து தான் பாடம் நடத்துகிறோம். ஆன்லைன் வகுப்பில் ஏற்படும் சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு விளக்கம் பெறுகின்றனர். நானும், இப்பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் முதலாமாண்டு மாணவி சாம்பவியும் இணைந்து, மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறோம். கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோரிடம் எடுத்துரைத்தோம். தொடர் முயற்சியால், தற்போது எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
மழைக்காலங்களில் டியூசன் எடுப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. எங்கள் பகுதியில், 15 ஆண்டுகளாக பயன்படுத்தாத தண்ணீர் தொட்டியும், மோட்டார் அறையும் உள்ளது. இதை அப்புறப்படுத்தி, நுாலகத்துடன் இணைந்த டியூசன் சென்டர் அமைத்து தந்தால், மாணவர்கள் படிக்க வசதியாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us