தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழை கட்டாய பாடம் ஆக்குங்க; மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

தமிழை கட்டாய பாடம் ஆக்குங்க; மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

தமிழை கட்டாய பாடம் ஆக்குங்க; மத்திய அமைச்சரிடம் கோரிக்கை


UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM

ADDED : ஜூலை 11, 2021 09:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM ADDED : ஜூலை 11, 2021 09:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கி, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்,&'&' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., சிவா கோரிக்கை விடுத்தார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேற்று டில்லியில் சந்தித்து பேசிய சிவா கூறியதாவது:

தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இல்லை. எனவே தமிழக மாணவர்கள், தமிழ் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது. அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி பேசுபவர்களுக்கு வகுப்புகள், பாடப்பிரிவுகள் இருக்க வேண்டும்.இதுகுறித்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் வலியுறுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், &'ஆன்லைன்&' வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள பாடங்களில், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்றவை தான் உள்ளன; தமிழ் இல்லை.ஆறாம் வகுப்பு மாணவன் சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றால் தான், ஏழாம் வகுப்பு செல்ல முடியும் என்பதற்காக, சமஸ்கிருதத்தை கட்டாயமாக்கி உள்ளனர்.
ஆனால், தாய் மொழியில் படிக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து, மத்திய அமைச்சரிடம் சுட்டிக் காட்டினேன். அதற்கு, &'இது கொள்கை அளவிலான முடிவு. நிச்சயமாக நல்ல முறையில் இதற்கு தீர்வு காணப்படும்.பிரதமர் உட்பட நாங்கள் யாரும், எந்த ஒரு மாநில மொழிகளுக்கும் எதிரானவர்கள் இல்லை&' என்று அமைச்சர் கூறினார். அப்படியானால், அதை நடைமுறையில் காட்டும்படி, அவரிடம் நான் வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us