பள்ளிகள் திறக்கும் முன்பே கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்
பள்ளிகள் திறக்கும் முன்பே கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM
ADDED : ஜூலை 11, 2021 09:41 AM
திண்டுக்கல்:
பள்ளிகளைத் திறக்கும் முன்பே இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பாதுகாக்க புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு இவ்வாண்டுக்கான பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும். இளநிலை - முதுநிலை படிப்புகளில் வெவ்வேறு பாடம் படித்தோருக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கிடையாது. எனவே, பட்டதாரி ஆசிரியர்களை மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
பள்ளிகளை திறக்கும் முன்பே இடமாறுல் கலந்தாய்வை நடத்த வேண்டும். இதில் பங்கேற்க 3 ஆண்டுகள் தேவை என்ற நிபந்தனையை அகற்ற வேண்டும். கடந்த ஆண்டுகளில் பணிநிரவலால் தொலை துாரங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
