தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடப்புத்தகத்தில் மலாலா வாழ்க்கை வரலாறு; கொதிக்கும் பாக்., அரசு

பாடப்புத்தகத்தில் மலாலா வாழ்க்கை வரலாறு; கொதிக்கும் பாக்., அரசு

பாடப்புத்தகத்தில் மலாலா வாழ்க்கை வரலாறு; கொதிக்கும் பாக்., அரசு


UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM

ADDED : ஜூலை 14, 2021 01:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM ADDED : ஜூலை 14, 2021 01:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பஞ்சாப்:
பாகிஸ்தானின் கைபர் பட்டன்வாலா மாகாணத்தைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய்(24). மிக இளவயதில் குழந்தைகள் உரிமை மற்றும் கல்விக்கான நோபல் பரிசு பெற்ற இவர், பாகிஸ்தானில் பெண்கள் கல்வி குறித்து குரல் கொடுத்து உலக கவனம் பெற்றார்.
தற்போது பிரிட்டனில் கல்லூரி பயின்றுவரும் மலாலா சர்வதேச பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அவ்வப்போது கருத்துக்கள் வெளியிடுவது வாடிக்கை. தற்போது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பள்ளி பாடப்புத்தகத்தில் பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் மலாலா குறித்த பாடமும் அவரது புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பாடப்புத்தகங்களை பறிமுதல் செய்து அந்த பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்த மிக மூத்த தலைவர்கள் குறித்த பாடத்தில் மலாலா வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டு இருப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் 24 வயதை எட்டிய மலாலா இஸ்லாமிய மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை எதிர்த்தவர் ஆவார். பெண்களுக்கு கல்வி மறுப்பு, இளவயதில் திருமணம் உள்ளிட்டவற்றை எதிர்த்தார். பாகிஸ்தான் தனியார் பள்ளிகள் ஒருங்கிணைப்பு அமைப்பு மலாலா வாழ்க்கை வரலாறு குறித்த ஓர் ஆவணப்படத்தை தயாரித்து இதனை தனியார் பள்ளி மாணவர்களுக்கு போட்டு காண்பித்தது.
இதுமட்டுமல்லாமல் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வரலாற்று பாடப்புத்தகத்தில் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் பதிப்பகம் மலாலாவின் புகைப்படத்தை அட்டைப்படமாக வைத்துள்ளது. பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறு கொண்ட இந்த 33 பக்க புத்தகத்தில் மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை எவ்வாறு சேர்க்கலாம் என சர்ச்சை எழுந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு தனது 17வது வயதில் கல்விக்கான நோபல் பரிசை பெற்றவர் மலாலா. இந்த விருதை இந்திய சிறுவர் உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து இவர் பெற்றார். இவரது இந்த வாழ்க்கை வரலாறு, புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பாடப்புத்தகம் ஏற்கனவே பல பாகிஸ்தான் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி விடப்பட்டுள்ளது. தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் போலீசார் இதுகுறித்து ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த புத்தகங்களை மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்து வருகின்றனர். ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் பதிப்பகம் இந்த புத்தகத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. மேலும் இந்த புத்தகத்திற்கு பாகிஸ்தான் அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை.
முன்னதாக மலாலா எழுதிய &'ஐ அம் மலாலா&' என்கிற புத்தகம் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக பல கருத்துக்களை கொண்டது. உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இந்த புத்தகம் வெளியானது முதலே பாகிஸ்தான் அரசு இவர்மீது கடும் கோபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us