தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி அமைச்சர் மாவட்டத்தில் புத்தகம் பற்றாக்குறை

கல்வி அமைச்சர் மாவட்டத்தில் புத்தகம் பற்றாக்குறை

கல்வி அமைச்சர் மாவட்டத்தில் புத்தகம் பற்றாக்குறை


UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM

ADDED : ஜூலை 14, 2021 01:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM ADDED : ஜூலை 14, 2021 01:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி:
&'பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க புத்தகம் பற்றாக்குறை உள்ளது&' என, வட்டார கல்வி அலுவலர் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி, வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பல்வேறு பேட்டிகளில், பள்ளி மாணவர்களுக்கு வழங்க போதுமான புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன, பற்றாக்குறை இல்லை என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி என்பவர், தன் கட்டுப் பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, 4 ஆயிரம் புத்தகங்கள் கேட்டதில், 2,875 புத்தகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மீதியுள்ள, 1,125 புத்தகங்கள் கேட்டு, திருச்சி மாவட்ட கல்வி அலுவலருக்கு, நேற்று முன்தினம், 12ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதம் ஆசிரியர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப்பில் பரவி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் புத்தக பற்றாக்குறை என்பதை, வட்டார கல்வி அலுவலரே கடிதம் மூலம் தெரிவித்து, அதை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us