தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10, பிளஸ் 2 தேர்வுகள் ரத்தானதால் கட்டணம் திருப்பி கேட்டு வழக்கு

10, பிளஸ் 2 தேர்வுகள் ரத்தானதால் கட்டணம் திருப்பி கேட்டு வழக்கு

10, பிளஸ் 2 தேர்வுகள் ரத்தானதால் கட்டணம் திருப்பி கேட்டு வழக்கு


UPDATED : ஜூலை 15, 2021 12:00 AM

ADDED : ஜூலை 15, 2021 06:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2021 12:00 AM ADDED : ஜூலை 15, 2021 06:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தாண்டு நடக்கவிருந்த 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ரத்து செய்தது. இந்த நிலையில், டில்லியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவரின் தாய் தீபா ஜோசப், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். &'தேர்வுகள் நடக்காததால், தேர்வு கட்டணமாக வசூலிக்கப்பட்ட 2,100 ரூபாயை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்&' என, மனுவில் அவர் கூறியுள்ளார்.
எட்டு வாரம்

இந்த மனுவை கோரிக்கையாக ஏற்று, தேர்வுக் கட்டணம் குறித்து எட்டு வாரத்துக்குள் முடிவெடுக்கும்படி, சி.பி.எஸ்.இ.,க்கு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீக் ஜலன் உத்தர விட்டார். அத்துடன் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.&'என்னுடைய மகனும் பிளஸ் 2 படித்து வந்தான். இந்த வழக்கின் தீர்ப்பால் எனக்கும் பலன் கிடைத்திருக்கும்.இருப்பினும் வழக்கை நான் விசாரிக்க யாரும் ஆட்சேபனை தெரிவிக்காததற்கு நன்றி&' என, நீதிபதி குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us