தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டாய கல்வி: கட்டணம் நிர்ணயம்

கட்டாய கல்வி: கட்டணம் நிர்ணயம்

கட்டாய கல்வி: கட்டணம் நிர்ணயம்


UPDATED : ஜூலை 15, 2021 12:00 AM

ADDED : ஜூலை 15, 2021 06:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2021 12:00 AM ADDED : ஜூலை 15, 2021 06:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசின் இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் திட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை, அரசு நிர்ணயித்துள்ளது. இதை பின்பற்றியே நிதி வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்களில் மாணவர்கள் கட்டணம் இன்றி சேர்க்கப்படுகின்றனர். அதாவது, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், எது நுழைவு வகுப்போ, அதில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை, கட்டணமின்றி படிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை, தமிழக அரசே பள்ளிகளுக்கு வழங்கும்.
இந்நிலையில், வரும் ஆண்டுகளில் கல்வி கட்டணம் எவ்வளவு வழங்கப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை, நேற்று அரசாணை பிறப்பித்தது.
முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணை: 

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு 12 ஆயிரத்து 449 ரூபாய்; 3ம் வகுப்பு 12 ஆயிரத்து 579 ரூபாய்; 4ம் வகுப்பு, 12 ஆயிரத்து 585 ரூபாய்; 5ம் வகுப்பு 12 ஆயிரத்து 832 ரூபாய்; 6ம் வகுப்பு, 17 ஆயிரத்து 78 ரூபாய்; 7ம் வகுப்பு 17 ஆயிரத்து 107 ரூபாய் மற்றும் 8ம் வகுப்புக்கு, 17 ஆயிரத்து 28 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் மட்டுமே, அரசு தரப்பில் கல்வி கட்டணம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us