தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வில் அதிக மதிப்பெண் தினமும் ஆன்லைனில் பயிற்சி

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் தினமும் ஆன்லைனில் பயிற்சி

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் தினமும் ஆன்லைனில் பயிற்சி


UPDATED : ஜூலை 17, 2021 12:00 AM

ADDED : ஜூலை 17, 2021 08:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2021 12:00 AM ADDED : ஜூலை 17, 2021 08:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் &'நீட்&' தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் தினமும் ஆன்லைன்மூலம் பயிற்சி அளிக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் விரைவில் வழங்கப்பட உள்ளது. வரும் செப்டம்பரில் மருத்துவக் கல்லுாரிகளில் சேர &'நீட்&' தேர்வு நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் &'நீட்&' தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் மூலம் தினமும் ஆன்-லைனில் பயிற்சி வழப்படுகிறது. 
முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி கூறுகையில், &'நீட்&' தேர்விற்காக எலைட் மூலம் 35 ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தங்கியுள்ளவர்களுக்கு தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 2 முடித்துஉள்ள மாணவர்களுக்கு தினமும் 2 பாடங்கள் ஆன்-லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ள &'நீட்&' வாட்ஸ் ஆப் குரூப் துவங்கியுள்ளோம். இவ்வாண்டு நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்&'நீட்&' தேர்வில் வெற்றிபெற வைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். எலைட்டில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு &'நீட்&' தேர்வு கட்டணமும் செலுத்த ஏற்பாடு செய்கிறோம்,&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us